1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (13:47 IST)

தேர்தலில் போட்டியில்லை.. ஆனா அதிமுகவை சும்மா விட மாட்டோம்! – கருணாஸ் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸ் அதிலிருந்து விலகி திமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். ஆனால் திமுகவும் அவரது கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ளாத நிலையில் திமுக ஆதரவை வாபஸ் பெற்றார். அதை தொடர்ந்து சில தொகுதிகளில் மட்டும் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடப் போவதில்லை என கருணாஸ் அறிவித்துள்ளார். அதேசமயம் அதிமுகவை 234 தொகுதிகளிலும் வீழ்த்துவதே லட்சியம் என்றும் கட்சி தொண்டர்கள் அதற்காக உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.