வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 16 மார்ச் 2021 (16:39 IST)

ரஜினியின் 'அண்ணாத்த' பட ஷூட்டிங் மீண்டும் தள்ளிப்போகிறதா??

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த பட ஷூட்டிங்  தள்ளிவைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

சிறுத்தை சிவாஇயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறார்கள்.

சமீபத்தில், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு நேற்று முதல் ( மார்ச் 15 ஆம் தேதி )சென்னையில் தொடங்கியது.

அடுத்த 30 நட்களுக்கு அண்ணாத்த படப்பிடிப்பு பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் சென்னையில் ஹூட்டிங் முடிந்தபின், பொள்ளாச்சியில் படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளதகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையாகப் பரவிவருவதால் ரஜினியில் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.ஆனால் இதுகுறித்து முறையாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ரஜினியின் அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.