செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2024 (12:47 IST)

பாஜக கூட்டணி, இந்தியா கூட்டணி.. எந்தெந்த மாநிலங்களில் முன்னிலை?

Modi Congress
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பத்தில் பாஜக கூட்டணிக்கு சாதகமாக முடிவுகள் இருந்த நிலையில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் பாஜக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே வெறும் 50 தொகுதிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாஜக கூட்டணி மத்திய பிரதேசம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், குஜராத், பீகார், டெல்லி, அசாம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் , அந்தமான் நிக்கோபார் ஆகிய மாநிலங்களில் அதிக தொகுதிகளை பெற்றுள்ளது 
 
இந்த நிலையில் இந்தியா கூட்டணி உத்தர பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா, மணிப்பூர், சண்டிகர், மேகாலயா, புதுச்சேரி, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் முன்னிலை பெற்றுள்ளது 
 
குறிப்பாக உத்தர பிரதேச மாநிலம் என்பது பாஜகவின் கோட்டை என்று கூறப்பட்ட நிலையில் அங்கு இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
கோவா, ஜம்மு காஷ்மீர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இரு கூட்டணியும் கிட்டத்தட்ட சம அளவில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran