வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (10:35 IST)

விருதுநகரில் விஜயபிரபாகரன் முன்னிலை.. ராதிகா பின்னடைவு..!

Vijaya Praba Radhika
தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தை பொருத்தவரை ஸ்டார் தொகுதியின் நிலவரங்களையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அதே தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் ராதிகா சரத்குமார் பின்னடைவில் இருப்பதாக கூறப்படுகிறது
 
தேமுதிகவின் விஜய பிரபாகரன் முன்னிலையில் இருப்பதை அடுத்து கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முதல்முறையாக தேமுதிகவை சேர்ந்த ஒரு எம்பி பாராளுமன்றத்திற்கு செல்வாரா? என்பதை தேர்தல் முடிவை முடிவுகள் முழுமையாக வெளிவந்தவுடன் பார்ப்போம் 
 
இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை திமுக 36 தொகுதிகளிலும் அதிமுக இரண்டு தொகுதிகளிலும் பாஜக ஒரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. கோவையில் அதிமுகவின் அண்ணாமலை முன்னிலை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran