புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (10:33 IST)

வாரணாசியில் நரேந்திரமோடி பின்னடைவு.. காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை..!

Modi
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி சில ஆயிரம் வாக்குகள் பின்னடைவில் இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை 8 மணி முதல் பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அகில இந்திய அளவில் பாஜக 296 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 209 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன

முக்கிய வேட்பாளர்கள் தொகுதிகள் குறித்த விவரங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பின்னடைவில் இருப்பதாக கூறப்படுவது பாஜக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி 9505 வாக்குகள் பெற்றுள்ளதாகவும் அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் என்பவர் 14530 வாக்குகள் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது

பாஜக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பின்னடைவில் இருக்கிறார் என்ற தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தினாலும் இது ஆரம்பகட்ட சுற்று தான் என்றும் போகப்போக தான் முடிவுகள் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran