திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2024 (11:15 IST)

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்து எத்தனை தொகுதிகளில் முன்னிலை?

BJP Congress
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பத்தில் பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தாலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைவு ஏற்பட்டு வருகிறது என்றும் ஆரம்பத்தில் குறைவான தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்த காங்கிரஸ் கூட்டணி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி பாஜக கூட்டணி 296 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் அதில் 245 இடங்களில் பாஜக மட்டும் தனித்து முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக பாஜகவின் கூட்டணி கட்சிகள் வெறும் 51 தொகுதிகளில் தான் முன்னிலை பெற்றுள்ளது.
 
 அதேபோல் இந்தியா கூட்டணியில் 227 தொகுதிகள் முன்னிலை பெற்றிருந்தாலும் காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது என்பதும் அதன் கூட்டணி கட்சிகள் தான் 127 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இப்போது உள்ள முடிவுகளை வைத்து பார்க்கும்போது பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் இருப்பதால் கூட்டணி ஆட்சி தான் ஏற்படும் என்பது உறுதியாகி உள்ளது. அந்த கூட்டணி ஆட்சி செய்வது பாஜகவா? அல்லது காங்கிரஸ் கட்சியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran