1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2025 (09:12 IST)

பொங்கல் பண்டிகைக்கு 25,752 சிறப்பு பேருந்துகள்! சென்னை 3 பேருந்து நிறுத்தங்கள்! - முழுமையான தகவல்கள்!

பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லவும், திரும்ப வரவும் சிறப்பு பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர் “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயங்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,736 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட நாட்களுக்கு 7,800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

 

பொங்கல் முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 15ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் 5,290 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் 6,926 பேருந்துகளும் என மொத்தமாக 12,216 பேருந்துகள் இயக்கப்படும்.

 

மொத்தமாக பொங்கலுக்காக தமிழகம் முழுவதும் 25,752 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

 

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் வழியாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாங்கம் பேருந்து முனையத்தில் இருந்து புறப்படும்.

 

வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை வழியாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி வழியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K