மோடி அரசுக்கு எதிராகப் பேசினால் விளைவுகளை சந்திக்க வேண்டும்: முதல்வர் ஆவேசம்!
மோடி அரசை எதிர்த்து பேசினால் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என பிபிசி சோதனை குறித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
மோடி அரசு என்ன விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் மோடி அரசுக்கு எதிராக யாராவது பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது பிபிசி சோதனை மூலம் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மோடி அரசுக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மக்கள் இறுதியில் மோடி அரசு மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவை இந்து ராஷ்டிரமாக ஆக்க விரும்பினால் இந்தியாவை அழிக்க நினைக்கிறார்கள் என்று தான் அர்த்தம் என்றும் நம் மகாத்மா காந்தியின் பாதையில் செல்வோம் என்றும் மகாத்மா காந்தியின் கொள்கைகளை கடைப்பிடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran