திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:14 IST)

வருமானவரி அதிகாரிகளிடம் சம்பள விவரங்களை தெரிவிக்க வேண்டாம்.. ஊழியர்களுக்கு பிபிசி அறிவிப்பு..!

bbc delhi
டெல்லி மற்றும் மும்பை பிபிசி அலுவலகங்களில் மூன்றாவது நாளாக இன்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் தனிப்பட்ட சம்பள விவரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஊழியர்களுக்கு பிபிசி தெரிவித்துள்ளது. 
 
வருமானவரித்துறையினர் தனிப்பட்ட ஊதியம் குறித்து கேள்வி கேட்டால் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் ஊதியம் தொடர்பான மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம் என்றும் பிபிசி அறிவித்துள்ளது. 
 
மேலும் சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை அளிக்குமாறும் பிபிசி குறிப்பிட்டுள்ளது. 
 
இந்த நிலையில் பிபிசி அலுவலகங்களில் 20 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடத்தி வருவதை அடுத்து ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து பணிபுரிய லண்டனை தலைமையிடமாக கொண்ட பிபிசி அறிவுறுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva