செவ்வாய், 4 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 4 மார்ச் 2025 (10:17 IST)

அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு.. கோவில் திறக்கும் நேரம் மாற்றம்..!

ramar
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், காலையில் கோவில் திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அயோத்தி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட நிலையில், இந்த கோவில் தினசரி காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பக்தர்கள் கூட்டம் காலை நேரத்தில் அதிகமாக இருப்பதால், தரிசன நேரம் காலை 6:00 மணிக்கே மாற்றப்பட்டுள்ளது.

நேற்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 6 மணிக்கு நடை திறந்தவுடன், 6:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 11:50 மணிக்குள் அனுமதி வழங்கப்பட்டு, அதன் பின் 12 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பின்னர், பகல் 1:00 மணி முதல் மாலை 6:50 வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மாலை 7 மணிக்கு சந்தியா ஆரத்தி வழிபாடு நடந்த பிறகு, இரவு 9:45 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என்றும் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதனை கணக்கில் கொண்டு, இனி காலை 6 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக அயோத்தி கோவிலுக்குள் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran