வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (07:32 IST)

ஆட்டோ மீது மோதிய பஸ் கிணற்றில் விழுந்து 20 பேர் பலி: பெரும் பதட்டம்

ஆட்டோ மீது வேகமாக வந்த பஸ் ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பேருந்தும் ஆட்டோவும் சாலை அருகில் இருந்த கிணற்றில் விழுந்ததால் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் அருகே ஆட்டோ மீது நேருக்கு நேராக பேருந்து ஒன்று பயங்கரமாக மோதியது. இன்று காலை நடந்த இந்த விபத்தில் சாலையின் அருகே இருந்த ஒரு ஆழ்துளை கிணற்றில் ஆட்டோ மற்றும் பேருந்து விழுந்தது. இதில் ஆட்டோவில் இருந்த அனைவரும் உயிரிழந்து விட்டதாகவும் பேருந்தில் இருந்தவர்கள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
இதுவரை 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 30 பேர் கிணற்றில் சிக்கியிருப்பதாகவும் அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப்படையினர் தீவிர முயற்சியில் இருப்பதாகவும் தெரிகிறது
 
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மகாராஷ்டிர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மீட்பு பணிகளை நேரடியாக பார்வையிட்டு துரிதப்படுத்தினார். மீட்பு பணிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் பலியான 20 பேரின் உறவினர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் நேரில் ஆறுதல் கூறியதோடு சிகிச்சைக்கு தேவையான அனைத்து செலவுகளையும் அரசே பொறுப்பு ஏற்கும் என்றும் கூறியுள்ளார். இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது