செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (11:25 IST)

10 ரூபாய்க்கு உணவளிக்கும் சிவ போஜன் திட்டம்! – மராட்டியத்தில் அறிமுகம்!

மகாராஷ்டிராவில் பத்து ரூபாய்க்கு மதிய உணவு அளிக்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர தேர்தலின்போது மக்களுக்கு குறைந்த விலையில் உணவளிக்கும் உணவகங்களை அரசே செயல்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது கூட்டணி கட்சிகள் துணையோடு ஆட்சி அமைத்திருக்கும் சிவசேனா கட்சி அந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரசின் மதிய உணவு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டன. சிவ போஜன் என்றழைக்கப்படும் இந்த உணவகங்களில் ரூபாய் 10க்கு உணவளிக்க இருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் 2 சப்பாத்தி, சாதம், பருப்பு மற்றும் காய்கறி கூட்டு 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

காலை 12 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் இந்த சிவ போஜன் உணவகங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் நல்ல உணவு கிடைக்கும். இந்த திட்டத்தை மகாராஷ்டிர மக்கள் வரவேற்றுள்ளனர்.