புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (16:29 IST)

தோனியின் ஜன்னலோர இருக்கை – நெகிழ்ந்த சஹால் !

பேருந்தில் செல்லும் போது தோனிக்காக ஒதுக்கப்படும் இருக்கையில் யாரும் அமர்வதில்லை என சுழற்பந்து வீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் சஹால் தனது மொபைல் போனில் சக வீரர்களை நேர்காணல் செய்து அதை தனது டிவிட்டரில் பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டு வருபவர். அதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

தற்போது நியுசிலாந்தில் இருக்கும் இந்திய அணி மூன்றாவது போட்டிக்கக ஹாமில்டன் மைதானத்துக்கு பேருந்தில் சென்றபோது இந்தியாவின் சஹால், ஒவ்வொரு வீரரிடமும் கேள்விகளை எழுப்பினார். அப்போது பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்ற அவர் உணர்ச்சிகரமாக ‘பேருந்தின் கடைசி சீட்டில் இருக்கும் ஜன்னலோர இருக்கை எப்போதும் லெஜண்ட் ஒருவருக்காக ஒதுக்கப்படும். அவருக்காக சீட்டில் இப்போதும் யாரும் உட்காருவதில்லை. அணியில் உள்ள அனைவரும் தோனியை மிஸ் செய்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.