புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2020 (15:04 IST)

சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பேருந்து பயணிகள்: செங்கல்பட்டு அருகே பரபரப்பு!

செங்கல்பட்டு அருகே உள்ள சுங்கச்சாவடி ஒன்றை பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அடித்து நொறுக்கிதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் என்ற பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் திருச்சிக்கு சென்ற பேருந்து ஒன்றின் ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது 
 
இந்த பிரச்சனையை வாக்குவாதத்தில் முடிந்து அதன் பின்னர் ஓட்டுநரும் நடத்துனரும் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்தப் பேருந்தின் ஓட்டுனர் சுங்கச்சாவடிக்கு குறுக்கே பேருந்தை நிறுத்தி, வேறு எந்த வாகனமும் அந்த சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் செய்தார்.
 
இதனால் நீண்ட வரிசையில் பேருந்துகளும் மற்ற வாகனங்களும் காத்திருந்தன. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் திடீரென வன்முறையில் இறங்கி சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். சுங்கச்சாவடியில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியதால் அடுத் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த  சுங்கச்சாவடி உடனே திறக்கப்பட்டு கட்டணமின்றி அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு உடனடியாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்