வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2024 (14:09 IST)

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் செப். 25ம் வரை நீட்டிப்பு.!!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   
 
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு கைது செய்தது.
 
கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
 
அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சி.பி.ஐ. வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க கூடாது என சி.பி.ஐ. டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 25ம் தேதி நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.