வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2024 (14:14 IST)

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

Andhra Wine
ஆந்திராவில் வரும் 1ம் தேதி முதல் ரூ.99-க்கு 180மிலி மதுபானங்கள் விற்பனைக்கு வருகின்றன.   
 
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் புதன்கிழமை அமராவதியில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்தின் புதிய மதுக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய கொள்கையில், அனைத்து பிராண்டு மதுபானங்களின் விலையையும் மாநில அரசு குறைத்துள்ளது. 
 
இந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே. பார்த்தசாரதி, "புதிய கொள்கையில் லாட்டரி முறையில் மதுபானக் கடைகளுக்கான உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதற்காக விண்ணப்பக் கட்டணமாக ₹2 லட்சம் வசூலிக்கப்படும் என்றும் உரிமம் ஒதுக்கப்பட்ட பிறகு எல்லா இடங்களிலும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

முந்தைய ஜெகன் அரசு மதுபானக் கொள்கையைத் தவறாகக் கையாண்டதால்  மாநில அரசுக்கு மிகப் பெரியளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது என்று  தெரிவித்தார். தரமற்ற மதுவை வழங்கியதால், உடல்நலக் குறைவும் ஏற்பட்டது என்றும் இதை எல்லாம் சரி செய்யும் விதமாகவே இப்போது புதிய மதுபான கொள்கையைக் கொண்டு வந்துள்ளோம் என்றும் அமைச்சர் பார்த்தசாரதி கூறினார்.

 
இந்த புதிய விதிகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அமலுக்கு வந்த பிறகு ஆந்திராவில் உள்ள மக்கள் எந்த பிராண்ட் மதுபானத்தையும் வெறும் ரூ.99க்கு வாங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.