இந்தியாவில் பிரபலமாக உள்ள ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள், மதுபான வகைகளையும் வீடுகளுக்கே டெலிவரி செய்ய அனுமதி பெற திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. உணவு டெலிவரிக்கு மட்டுமல்லாது ஏதாவது ஒரு பொருளை மற்றொரு இடத்தில் கொடுப்பதற்கு கூட வீட்டிலேயே வந்து வாங்கி சென்று பத்திரமாக கொடுத்துவிட செயலிகள் வந்துவிட்டன.
இந்நிலையில் உணவு டெலிவரியோடு மதுபான டெலிவரியையும் செய்வது குறித்து பிரபல உணவு டெலிவரி சேவை நிறுவனங்களான ஸ்விகி, சொமாட்டோ, பிக் பாஸ்கெட் ஆகியவை திட்டமிட்டு வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் குறைவான ஆல்கஹால் கொண்ட பீர், ஒயின் உள்ளிட்ட மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வதற்கு அனுமதி உள்ளது.
அதுபோல தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், கர்நாடகா, கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அனுமதி பெற்று பீர், ஒயின் ரகங்களை ஹோம் டெலிவரி செய்ய உணவு டெலிவரி நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
Edit by Prasanth.K