1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (19:55 IST)

நேருவை விட அம்பேத்கார் தான் சிறந்த பிராமணர்: சுப்பிரமணியன் சுவாமி

subramaniya swamy
நேருவை விட அம்பேத்கார் சிறந்த பிராமணர் என சுப்பிரமணியன் சாமி சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பெருந்தன்மையுடனும் புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டால் அவர்கள் தான் உண்மையான பிராமணர் என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளதாகவும் அதன்படி பார்த்தால் நேருவை விட அம்பேத்கார் தான் உயர்ந்த பிராமணர் என்றும் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்
 
அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர் அல்ல என்றும் அவர் ஒரு சிறந்த பிராமணர் என்றே நான் நம்புகிறேன் என்றும் அவர் உலகின் சிறந்த பல்கலைக் கழகங்களில் இருந்து படிப்புகள் மற்றும் அவரது அரசியல் அமைப்பு சட்டம் மகத்தான சாதனை செய்துள்ளது என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்
 
நேருவை விட அம்பேத்கார் உயர்வான பிராமணர் என சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது