1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (22:13 IST)

மீண்டும் நேருக்கு நேர் மோதும் சிம்பு, தனுஷ்!

தமிழ் சினிமாவில்  சுமார் 40 ஆண்டுகளாக ரஜினி, கமல் படங்கள் ரிலீஸின் போது போட்டி இருக்கிறது.

அதேபோல் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் போட்டி காணப்படுகிறது. குறிப்பாக நடிகர் தனுஷ், சிம்பு இருவரின் படங்களுக்கு முதலில் போட்டி இருந்த நிலையில், சிம்புவின்  படங்கள் சரியான வரவேற்பு பெறாததால் அவரது  மார்க்கெட் சரிந்தது. ஆனால், தனுஷ் படங்கள் பெறும் வெற்றி பெற்றது.

சமீபத்தில் சிம்புவின் மாநாடு படங்கள் வெற்றி பெற்ற நிலையில்,  அவரது மார்க்கெட்  உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், சிம்பு  நடித்துள்ள வெந்து தணிந்த காடு படமும், தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படமும் வரும் ஆக்ஸ்ட் 18 ஆம் தேதி திரைக்குக் கொண்டு  வர  திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது,. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.