புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2023 (19:17 IST)

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..!

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேருவதற்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேருவதற்கு ஜூலை 20ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர 40 ஆயிரத்து 193 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஜூலை  22-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. 
 
அதேபோல் ஜூலை  20-ம் தேதி முதல் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடங்குவதாகவும், நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் 60 ஆயிரம் இடங்கள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த இடங்களுக்கான ஜூலை  20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இந்த கலந்தாய்வு செப்டம்பர் மாதம் வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran