1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (18:37 IST)

குழந்தைகள் உயரமாக வளர இந்த உணவுகளை கொடுங்கள்...!

Children
குழந்தைகளுக்கு ஒரு சில உணவுகளை கொடுத்தால் அவர்கள் உயரமாக வளர்வார்கள் என்று கூறப்படுகிறது. 
 
ஒன்று முதல் பருவம் அடையும் காலம் வரை குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவு கொடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 
 
குறிப்பாக குழந்தைகளுக்கு பால் அதிகமாக கொடுக்க வேண்டும் என்றும் அதேபோல் பன்னீர் தயிர் ஆகியவற்றையும் கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
நன்றாக வளர்வதற்கு பீன்ஸ் முட்டைக்கோஸ் ஆகியவை கொடுத்து பழக வேண்டும் என்றும் கீரை வகைகள் பயறு வகைகள் ஆகியவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் முட்டையில் புரதச்சத்து இருப்பதால் அது குழந்தைகளை உயரமாக வளர வைக்கும் என்றும் கேரட் போன்ற காய்கறிகளையும் கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran