1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (15:05 IST)

இந்திய குடியுரிமை பெற்றார் நடிகர் அக்‌ஷய் குமார்: மகிழ்ச்சியுடன் ட்விட் பதிவு..!

நடிகை அக்‌ஷய் குமார் இதுவரை கனடா நாட்டு குடியுரிமை மட்டுமே வைத்திருந்த நிலையில் தற்போது அவர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளார் 
 
கடந்த பல ஆண்டுகளாக பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய்குமார். இந்த நிலையில் அவர் கனடா நாட்டு குடியுரிமை மட்டும் வைத்திருந்தது பெரும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருந்தது 
 
இந்த நிலையில் தற்போது அவர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளார். இது குறித்த சான்றுகளை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  இந்திய குடியுரிமை வேண்டி கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணப்பித்த நிலையில் கொரோனா காரணமாக அதை பெறுவதில் காலதாமதமானது என்றும் தற்போது இந்திய குடியுரிமை பெற்றுள்ளது பெற்றுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
Edited by Siva