செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (07:52 IST)

ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் அபார ஆட்டம்.. 4வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி..!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 
 
இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையே நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இதில் இந்திய அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணியில் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்தது. ஹெட்மயர் 61 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து 179 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா அணியின் 17 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 179 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது 
 
தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 84 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. அவருக்கு உறுதுணையாக சுப்மன் கில் அபாரமாக விளையாடி  77 ரன்கள் அடித்தார். 
 
இந்த நிலையில் இரு அணிகளும் தற்போது தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில்  இறுதி போட்டி  இன்று நடைபெற உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் அணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva