17 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸிடம் தொடரை இழந்த இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அடுத்து இப்போது 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வந்த நிலையில் அதை 3-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.
இந்த தொடர் தோல்வியின் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸிடம் இந்திய அணி ஒரு தொடரை இழந்துள்ளது.
கடைசியாக கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்ற போது அங்கு ஒருநாள் தொடரை இழந்ததுதான் கடைசியாகும். அதன் பின்னர் இப்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் அணி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளது.