துணை முதலமைச்சரான மறுநாள்: அஜித்பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்தது வருமான வரித்துறை!
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக நேற்று முன்தினம் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், அதற்கான அடுத்த நாளே அவருடைய 1000 கோடி ரூபாய் சொத்துக்களை வருமான வரித்துறை விடுவித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பினாமி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய 1000 கோடிக்கு மேற்பட்ட சொத்துக்களை வருமான வரித்துறை விடுவித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
கடத்தல் 2021 ஆம் ஆண்டு சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அஜித் பவார் இருந்தபோது, அவருடைய அலுவலகங்களில் வருமான துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சுமார் 1000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பாஜக ஆட்சியில் இணைந்த பிறகு, அவர் மீதான பினாமி வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருடைய சொத்துக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
துணை முதலமைச்சர் ஆன அடுத்த நாளே பறிமுதல் செய்யப்பட்ட 1000 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வருமான வரித்துறையால் விடுவிக்கப்பட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran