1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2024 (09:17 IST)

ஆறிலிருந்து அறுபது வரை ரசிகர்கள்.. அருமை நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Rajnikanth Mk Stalin

இன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் காலை முதலே பல திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

 

திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K