சென்னை விமான நிலையத்தில் ஒரேநாளில் 13 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அந்த விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் பெரும் அவதியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கன மழை பெய்து வருவதால் சென்னையில் இருந்து கிளம்ப வேண்டிய 13 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டது. அந்த விமானங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:
சென்னையில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கொச்சி செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம்
காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
காலை 10.50 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமுகா செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம்
பகல் 12 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்
பகல் 12.35 மணிக்கு சிலிகுரி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
பகல் 1.55 மணிக்கு இலங்கை யாழ்ப்பாணம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்
இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
சென்னைக்கு காலை 10.20 மணிக்கு வரவேண்டிய கொச்சி ஸ்பைஸ்ஜெட் விமானம்
பகல் 1.45 மணி - திருவனந்தபுரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
மாலை 3 மணி - மதுரை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்
மாலை 5.10 மணி - யாழ்ப்பாணம் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்
மாலை 5.55 மணி - கர்நாடக மாநிலம் சிவமுகா ஸ்பைஸ்ஜெட் விமானம்
இரவு 10.05 மணிக்கு வரவேண்டிய கொல்கத்தா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம்
சென்னையில் நிலவிய மோசமான வானிலையால், டெல்லியில் இருந்து வந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது
காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட வேண்டிய விமானம், மதியம் 1 மணிக்கு புறப்பட்டது.
மங்களூரில் இருந்து நேற்று காலை 10:40 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பகல் 11.40 மணிக்கு சென்னை வந்தடைந்தது.
Edited by Siva