1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (14:18 IST)

ஜூலை 1-ம் தேதி உங்கள் வங்கிக் கணக்குகளில் ஒரு மேஜிக் நடக்கும்: ராகுல் காந்தி

rahul gandhi
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலை ஒன்றாம் தேதி உங்கள் வங்கு கணக்கில் ஒரு மேஜிக் நடக்கும் என்றும் ஒவ்வொரு ஏழைப் பெண்ணின் கணக்கிலும் ரூ.8500 டெபாசிட் செய்யப்படும் என்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி தொகுதியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்
 
 இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்கள் வங்கி கணக்கில் மேஜிக் நடக்கும் என்றும் இந்த தொகை தொடர்ந்து வரும் என்றும் இந்தியாவில் வறுமையை அகற்ற அனைத்து வகையிலும் கடுமையாக போராடுவோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார் 
 
ஏழை குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்த நிலையில் ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதும், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழை பெண்ணின் குடும்பத்திற்கும் ரூபாய் 8500 கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது
 
ராகுல் காந்தியின் இந்த கருத்து குறித்து பிரதமர் மோடி பதிலடி கொடுத்தபோது, ‘ராகுல் காந்தி  ஒரு அரச மந்திரவாதி.  அவர் வறுமையை அகற்றும் கருத்து மூலம் நாட்டையே திகைக்க வைத்திருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கிறார்.
 
Edited by Mahendran