1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மே 2024 (17:16 IST)

திருமணம் எப்போது? வெட்கத்துடன் பதில் அளித்த ராகுல் காந்தி..!

rahul gandhi
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது பொதுமக்களில் ஒருவர் திருமணம் எப்போது என்று கேள்வி கேட்டபோது விரைவில் செய்து கொள்வேன் என்று வெட்கத்துடன் கூறினார்.
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 53 வயதாகியும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்பதும் அவரது சகோதரி குழந்தைகள் திருமண வயதை வந்து விட்டபோதிலும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் தெரியாமல் உள்ளது. 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தி இன்று ஜெய்பூரில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகளிடம் உரையாடிய போது ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தினார். 
 
புத்திசாலியாகவும் அழகாகவும் இருந்தபோதிலும் திருமணத்தை கருத்தை ஏன் கொள்ளவில்லை என்ற மாணவர் ஒருவர் கேட்டதற்கு தனது பணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான் முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அதனால்தான் திருமணத்திற்கு இடமில்லை என்றும் கூறினார். அது மட்டும் இன்றி விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் வெட்கத்துடன் கூறினார். 
 
ஏற்கனவே ஒருமுறை ராகுல் காந்தி பிரதமர் ஆன பின்னர்தான் திருமணம் என்று கூறியிருந்த நிலையில் வரும் தேர்தலில் அவர் வெற்றி பெற்று பிரதமர் ஆன பின்னர் திருமணம் செய்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran