தொடர்புடைய செய்திகள்
- அட்சய திருதியை முடிந்தவுடன் தொடர் சரிவில் தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?
- அட்சய திருதியை முடிந்தவுடன் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!
- தங்கத்தை வாங்குறதா.. வேடிக்கை பாக்குறதா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
- அட்சய திருதியை டிமாண்ட்.. ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
- அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?
தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 குறைவு..!
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளதாகவும் சென்னையில் ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ரூபாய் 6,690 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 280 குறைந்து ரூபாய் 53,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,160 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,280 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 90.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
