தொடர்புடைய செய்திகள்
- நீட் தேர்வு வினாத்தாளை லீக் செய்ய ரூ.50 லட்சம்.! மாணவர்களிடம் இடைத்தரகர்கள் வசூல்..!!
- 4 மாதங்களில் 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள மலையாள சினிமா!
- ஊடகத்துறை ஜாம்பவான்கள் உருவாக்கியுள்ள புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் அறிமுக விழா!
- ஒரு வாரத்தில் 50 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டிய அரண்மனை 4!
- ஒரே நாளில் 3 முறை விலை உயர்ந்தும் அட்சய திருதியை நாளில் ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை!
நடிகர் சங்க கட்டிடம்..! ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய நடிகர் தனுஷ்...!!
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு நடிகர் தனுஷ் இன்று ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்பு கணக்கிடப்பட்டது.

இதற்காக நடிகர்கள் கமல், விஜய், உதயநிதி, நெப்போலியன் ஆகியோர் ரூ. 1 கோடி வைப்புநிதியாக முன்பு வழங்கினர். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 50 லட்சம் வழங்கினார். இந்நிலையில் இன்று நடிகர் தனுஷ் ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
புதிய கட்டிடப் பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக ரூ. 1 கோடியை தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோரிடம் தனுஷ் வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.