திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (15:02 IST)

விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்த பன்றி

pig bite a small boy
மகாராஷ்டிர மாநிலம் கொண்டா மாவட்டத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை பன்றி ஒன்று சிறுவனை தாக்கும் வீடியோ பரவலாகி வருகிறது.

இந்தியாவில்  பல இடங்களில்  தெரு நாய்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களைக் கடிக்கின்ற சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த  நிலையில், மகாராஷ்டிர மா நிலம் கொண்டா என்ற மாவட்டத்தில்  வீட்டிற்கு வெளியே   நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அந்த வழியாக வந்த பன்றி ஒன்று கொடூரமாகத் தாக்கிக் கடித்தது.

சிறுவனின் கதறல் குரலைக் கேட்டு அருகிலுள்ளோர் வருவதற்குள் அந்தப் பன்றி ஓடிவிட்டது.  சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுவனை பன்றி ஒன்று கடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.