1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (19:02 IST)

மகாராஷ்டிரம்: டிரக் மீது சொகுசுப் பேருந்து மோதி விபத்து! 4 பேர் உயிரிழப்பு,

maharashtra
மராட்டிய மாநிலம் புனே- சோலாபூர் நெடுஞ்சாலையில் டிரக் மீது சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
 

மராட்டிய மா நிலத்தில் உள்ள புனே – சோலாப்பூர் நெடுஞ்சாலையில்  இன்று அதிகாலையில் சோலாபூரிலிருந்து ஒரு சொகுசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது, அதிகாலை 5 மணியளவில் புனேவின் யாவத் கிராமம் அருகில்   நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 4 பேர் பலியானதாகவும், 15 பேர்  படுகாயமடைந்த  நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.