தொடர்புடைய செய்திகள்
- சீமான் இதை நிறுத்தலைனா கடும் விளைவுகளை சந்திப்பார்! - தமிழீழ போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை!
- சரியான ஆண் மகனாக இருந்தால் பெரியார் பெயர் சொல்லி வாக்கு கேளுங்கள் பார்க்கலாம்.. சீமான்
- பிரபாகரன் - சீமான் எடிட் புகைப்படம்.. அம்பலப்படுத்திய சங்ககிரி ராஜ்குமாருக்கு மிரட்டல்?
- ஆமைக்கறி கதையெல்லாம் டூப்.. உடைத்துச் சொன்ன பிரபாகரன் அண்ணன் மகன்! - சிக்கலில் சீமான்!
- தி.மு.க.வில். இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். தி.மு.க.வையும் நாங்கள் தான் வளர்க்கிறோம்: சீமான்
இது பெரியார் மண் இல்ல.. பெரியாரே ஒரு மண்ணுதான்! - மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சீமான்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து மீண்டும் மீண்டும் பேசி வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் சமீபத்தில் பெரியார் உறவுகளுக்கிடையேயான உடலுறவு குறித்து பேசியதாக சொன்ன கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சீமான் மீது பல்வேறு மாவட்டங்களிலும் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அமைப்புகளும் சீமானை கண்டித்து போராட்டம் நடத்தின.
ஆனாலும் சீமான் தொடர்ந்து பெரியாரை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்காகவே சீமான் இவ்வாறு பேசி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் “பெரியார் மண் என்று சொல்லாதீர்கள். இது சேர, சோழ, பாண்டியன் மண். இது என் மண், தமிழ் மண். எங்களுக்கு இது பெரியார் மண் அல்ல. பெரியாரே ஒரு மண்ணுதான்” என ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும் “பெரியார்தான் முதன்முதலில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழ்நாட்டில் நடத்தினார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி பேசுகிறார். முதன்முதலில் தமிழ்நாட்டில் இந்தி பள்ளியைத் தொடங்கியதே உங்கள் பெரியார்தான். எல்லாரையும் படிக்க வைத்த பெரியார் உங்களை படிக்க வைக்காமல் விட்டுவிட்டார், வெரி சாரி” என பேசியுள்ளார். சீமான் தொடர்ந்து இவ்வாறு பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
