1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 நவம்பர் 2020 (13:55 IST)

கல் போட்டு தண்ணீர் குடிக்கும் பறவை; பள்ளி பாடத்தை நினைவுப்படுத்திய வைரல் வீடியோ!

பள்ளி பாடத்தில் காகம் ஒன்று பானையில் கல் போட்டு தண்ணீர் குடிக்கும் கதையை உண்மையாக்கியுள்ளது பறவை ஒன்று.

தமிழகத்தில் உள்ள சிறுவர் பழங்கதைகளில் பிரபலமான ஒன்று தண்ணீர் தேடும் காகத்தின் கதை. தாகத்தால் தண்ணீர் தேடி வரும் காகம் ஒன்று பானையில் தண்ணீர் இருப்பதை பார்க்கும். ஆனால் தண்ணீர் பானையின் அடியில் இருப்பதால் காகத்தால் அதை குடிக்க இயலாது. உடனே அருகே இருந்த கற்களை அதற்கு காகம் தூக்கிப்போட தண்ணீட் பானையின் மேற்பரப்பிற்கு வரும். அதை பருகி காகம் தாகம் தீர்க்கும்.

இந்த கதையை உண்மையாக்கும் விதமாக பறவை ஒன்று செய்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் ஒன்றில் இருக்கும் தண்ணீரை குடிக்கு முயலும் சிறு பறவை ஒன்று தண்ணீரை மேல் மட்டத்திற்கு கொண்டு வர சிறிய கற்களை பாட்டிலுக்குள் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.