1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Central Govt make new rules for foreign funds

வெளிநாட்டுல நிதி வாங்கி இங்க போராட கூடாது! – மத்திய அரசு புதிய உத்தரவு!

National
வெளிநாடுகளில் நிதி உதவி பெறும் இந்தியாவை சேர்ந்த தன்னார்வல, சேவை அமைப்புகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று பல்வேறு துறைகளில் சேவை செய்யும் தன்னார்வல நிறுவனங்கள் பல உள்ளன. இந்நிலையில் பல காலமாக இதுபோன்ற தன்னார்வல சேவை அமைப்புகள் வெளிநாடுகளில் உள்ள அமைப்புகளிடம் நிதி உதவி பெற்று உள்நாட்டில் பல்வேறுவிதமான போராட்டங்களை தூண்டுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் நிதி பெறும் தன்னார்வல அமைப்புகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வெளிநாட்டிலிருந்து நிதி பெரும் உள்நாட்டு தன்னார்வல அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட கூடாது. மேலும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் மாணவர் நல அமைப்புகள் வெளிநாட்டு நிதியை பெற முடியாது என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஆபாசத்தை தூண்டும் விளம்பரங்களுக்கு தடை! – உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!