வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 3 மே 2019 (07:01 IST)

மோடி தொகுதியில் 89 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி!

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில் 89 பேர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பிரதமர் மோடியை எதிர்த்து அய்யாக்கண்ணு தலைமையில் 100 விவசாயிகள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அய்யாக்கண்ணு திடீரென பல்டி அடித்து அமித்ஷாவை சந்தித்து பாஜக ஆதரவு கொடுத்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மோடியின் தொகுதியில் 25 விவசாயிகள் உள்பட மொத்தம் 119 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த நிலையில் இந்த தொகுதியில் நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டபோது அதில் 89 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அதில் 24 விவசாயிகளின் வேட்புமனுக்களும் அடங்கும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது எனவே இந்த தொகுதியில் மோடியை எதிர்த்து ஒரே ஒரு விவசாயி மட்டுமே போட்டியிடுகிறார். 
 
தற்போது பிரதமர் மோடியின் தொகுதியில் விவசாயி, சுயேட்சைகள், அரசியல் கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது