செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 2 மே 2019 (13:59 IST)

ஸ்டாலின் ஒரு புறம்போக்கு... எல்லை மீறிய பாஜக நாராயணன்

பாஜகவை சேர்ந்த நாராயணன் தனது டிவிட்டர் பக்கத்தில் எல்லை மீறிய சில பதிவுகளை பதிவிட்டுள்ளது அரசியல் அநாகரிக்கதை வெளிப்படுத்துவதாய் உள்ளது. 
 
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவை குறித்தும் மோடியை குறித்தும் சில விமர்சனங்களை முன்வைத்த நிலையில், பாஜகவினர் பதிலுக்கு இவர்கள் மீது விமர்சனங்கள் முன்வைத்தது. ஆனால், அந்த விமர்சனங்கள் எல்லையை மீறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதிலும் குறிப்பாக பாஜக நாராயணனின் டிவிட்டர் விமர்சனங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜக நாராயணன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி விமர்சனங்களுக்கு எதிராக பதிவிட்ட சில பதிவுகள் பின்வருமாறு, 
1. ஒன்றரை மணி நேரம் உண்ணாவிரதமிருந்து, ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த களவாணி, கொலைகார கூட்டமே, தமிழின துரோகியே திமுக.
 
2. திமுகவே உண்மையான காவலாளி: ஸ்டாலின். 
- காவலாளி அல்ல உளவாளி
 
3. பிரதமர் மோடி நாட்டின் காவலாளி அல்ல... களவாணி..!: மு.க.ஸ்டாலின். 
- அதை புறம்போக்கு சொல்லத்தேவையில்லை.
 
4. அரசு ஆவணங்களை எரித்தாலும் பிரதமர் மோடியால் தப்பிக்க முடியாது!: சாஸ்திரி பவனில் ஏற்பட்ட தீவிபத்தை சுட்டிக்காட்டி, ராகுல் 
- ஒரு முட்டாளின் மூடத்தனமான அறிக்கை.
 
5. பிரதமர் மோடி நாட்டின் காவலாளி அல்ல... களவாணி..!: மு.க.ஸ்டாலின். 
- ஸ்டாலின் தளபதி அல்ல. தமிழகத்தை காட்டி கொடுக்கும் துரோகி.
 
பாஜக நாராயணின் இது போன்ற விமர்சனங்களால் திமுகவினர் பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர்.