1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (07:45 IST)

75 வயதில் குழந்தை பெற்ற பெண்மணி: நெட்டிசன்கள் கண்டனம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 75 வயது பெண் ஒருவர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தபோதிலும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த 75 வயது பெண் ஒருவர் நேற்று 600 கிராம் எடையுள்ள பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். குழந்தை எடை குறைவாகவும் ஆறே மாதத்தில் பிறந்ததாலும் அந்த குழந்தை தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது
 
இந்தப் பெண் ஏற்கனவே ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையில் தனக்கென ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கின்றதா? என ஜெய்ப்பூரரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் மருத்துவரிடம் ஆலோசித்து அதன் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
 
இதனையடுத்து  அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமான நிலையில் அந்தப் பெண்ணின் உடல்நிலையை கணக்கில் கொண்டு அவரது வயிற்றில்  குழந்தை ஆறு மாதம் இருந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது 
 
தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் அந்த குழந்தை பத்தாவது மாதம் முடிந்தவுடன் தாயிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. 
 
இந்த நிலையில் 75 வயதில் குழந்தை பெற்றுள்ள பெண்ணிற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த தள்ளாத வயதில் தங்களுடைய உடல் நிலையை கவனித்துக்கொள்ளவே முடியாத நிலையிலிருக்கும் பெண் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வது தேவைதானா? என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர் இருப்பினும் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது அவரது தனிப்பட்ட முடிவு என்பதால் அவரை விமர்சனம் செய்ய யாருக்கும் தகுதி இல்லை என்றும் ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது