திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (16:32 IST)

ஹல்க்-ஆக மாறிய டாக்டர்; அறண்டு போன குழந்தை! – வைரல் வீடியோ!

மார்வெல் திரைப்படத்தில் டாக்டர் ப்ரூஸ் ஹல்க்காக மாறுவதை குழந்தை ஒன்று ஆர்வத்துடன் பார்க்கும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

மார்வெல் காமிக்ஸின் பிரபலமான கதாப்பாத்திரம் ஹல்க். டாக்டர் ப்ரூஸ் பேனர் கோபப்பட்டால் ஹல்க் என்ற பச்சை அசுரனாய் மாறி எதிரிகளை பந்தாடுவார். இந்த ஹல்க் கதாப்பாத்திரம் கார்ட்டூன், காமிக்ஸுகளில் பிரபலமானதோடு திரைப்படமாகவும் வெளிவந்தது. ஹாலிவுட் நடிகர் மார்க் ருஃபல்லோ டாக்டர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் பேடி ராஃப் என்பவரின் இரண்டு வயது குழந்தை இந்த சூப்பர்ஹீரோ படத்தை பார்த்துள்ளது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ப்ரூஸ் பேனர் பச்சை நிற ஹல்க்காக மாறுவதை பார்த்தபோது அந்த குழந்தையின் ரியாக்‌ஷனை அவரது அப்பா செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

அதை ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் பேனர் அதை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு “ப்ரூஸ் பேனர் பச்சை நிற அரக்கனாக மாறாமல் இருக்க இதுதான் ரகசிய வழி” என்று அந்த குழந்தையை குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.