1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: சனி, 12 அக்டோபர் 2019 (21:17 IST)

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் ! ஐந்தில் ஒரு குழந்தை பலி !

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ வலி ஏற்பட்டது.  அதனைத் தொடர்ந்து அவரை வீட்டார், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு 5 குழந்தைகள் பிறந்தது. ஆனால் ஐந்தில் ஒரு குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்ற பெண்மணி கர்பமாக இருந்தார்.  இன்று காலையில் வயிற்று வலி ஏற்பட்டது.  உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
அங்கு மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது ருஷானா 5குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார்.
 
அந்தக் குழந்தைகள் அனைத்தும் குறமாத பிரசவத்தில் பிறந்துள்ளதால், போதிய எடை இல்லாமல் உள்ளது. அதனால் ஐந்தில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. மீதமுள்ள 4குழந்தைகள் மருத்துவரின் கண்காணிபில் வைத்தி பாதுக்கப்பட்டு வருகின்றன.