கணவரின் குழந்தையைக் கொன்ற மனைவி – பின்னணி என்ன ?

Last Modified வியாழன், 10 அக்டோபர் 2019 (08:37 IST)
சென்னை தாம்பரத்தில் கணவரின் முதல் தாரத்துக் குழந்தையை சித்தி ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த பார்த்திபன் சில ஆண்டுகளுக்கு முன்னர் சூரியகலா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். பார்த்திபன் ஏற்கனவே திருமணம் ஆகி 6 வயதில் ராகவி என்ற பெண் குழந்தையும் உள்ளது. அதேப் போல சூரியகலாவுக்கு ஏற்கனவே ஒரு 3 வயதில் ஆண்குழந்தை உள்ளது. மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் சூரியகலா கர்ப்பம் தறித்துள்ளார். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதால் மூன்றாவதாக குழந்தை வேண்டாம் என பார்த்திபன் அதைக் கலைக்க சொல்லியுள்ளார்.

ஆனால் இது சூரியகலாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால் பிறக்கப்போகும் குழந்தைக்கு இடையூறாக இருக்கும் ராகவியை கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, நேற்று முன் தினம் மாலை ராகவி காணாமல் போயுள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் வீட்டுக்கு பின்னால் இருந்த முட்புதரில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சூரியகலாதான் குழந்தையைக் கொலை செய்து புதரில் வீசினார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :