சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 22 அக்டோபர் 2021 (17:27 IST)

61 மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள 61 அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில்  61 மாடிகள் கொண்ட பிரமாண்ட குடியிருப்பில் உள்ள 19 வது தளத்தில்  இன்று திடீரென்று தீ பிடித்து விபத்து ஏற்பட்டது. இதில்  பலர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தீயில் இருந்து தப்பிக்க முயன்ற 19 வயது இளைஞர் ஒருவர் கீழே குதித்து உயிரிழந்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து வருகின்றனர்