1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 அக்டோபர் 2021 (08:46 IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 2020 ஆம் ஆண்டு ஜூலை ஜூலை 28 சதவீதம் என உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி மத்திய அரசு பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அகவிலைப்படி 28 சதவீதம் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதன் மூலம் 47 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 9 ஆயிரத்து 488 கோடி கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது