1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (08:57 IST)

கேரளாவில் 9 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

கேரளாவில் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 9 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 9 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இதனிடையே கேரள மாநில இன்றைய கோரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 8,733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,855 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 118 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.