ஆக்சிஜன் பற்றாக்குறை: 55 குழந்தைகளின் உயிரை பறித்த மகாராஷ்டிரா அரசு!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்கிஜன் பற்றாக்குறை காரணமாக 55 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் உத்தர பிரதேசத்தில் ஆக்ஸிஜன் வசதி இல்லாததால், 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த்து. இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் அடுத்த 5 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிழந்தனர்.
தற்போது மகாராஷ்டிரா மாநில, நாசிக் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் ஆக்கிஜன் பற்றாக்குறையால் 55 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
இதுகுறித்து மருத்துவமனை டாக்டர் சுரேஷ் கூறுகையில், இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, இக்கட்டான நிலையில் கொண்டு வரப்பட்டவர்கள்.
குறைபிரசவம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட்ட குழந்தைகள்தான் இறந்துள்ளனர் என்று கூறினார். மேலும், அரசு மருத்துவமனையில் 18 இன்குபேட்டர்கள் உள்ள காரணத்தால், ஒரு இன்குபேட்டரில் 2 - 3 குழந்தைகளை வைக்க வேண்டிய நிலை உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.