1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2017 (14:57 IST)

இடிந்து விழுந்த சோமனூர் பேருந்து நிலையம்; 5 பேர் பலி

தொடர் மழை காரணமாக விரிசல் விட்டிருந்த கோவை சோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளர். 


 

 
கோவை சோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 20 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சோமனூர் பேருந்து நிலையம் மோசமாக நிலையில் இருப்பதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொள்ளவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களாக கோவையில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் விரிசல் விட்டிருந்த கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது.