1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : சனி, 9 செப்டம்பர் 2017 (19:23 IST)

சுற்றுலா தலமாக மாறிய பாகுபலி அரண்மனை

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் படப்பிடிப்பு நடந்த இடம் தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது.


 

 
ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படம் இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. பாகுபலி நடித்த பிறகு பிரபாஸ் இந்தியா முழுவதும் பிரபலமனார். இந்திய சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பாகுபலி பெற்றது.
 
இந்நிலையில் பாகுபலி படப்பிடிப்பு நடந்த இடத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகுபலி படப்பிடிப்பு தலம் தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது. மஹிஸ்மதி' என்று பெயரிடப்பட்டுள்ள அரங்குகள் நிறைந்த இடத்திற்கு இன்று பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.  
 
படத்தின் படப்பிடிப்பு நடந்த இடம் சுற்றுலா தலமாக பார்க்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதனால் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.