திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2017 (16:42 IST)

பாகிஸ்தான் பருவ மழைக்கு 164 பேர் பலி!!

பாகிஸ்தானில் பருவ மழைக்கு 164 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.


 
 
பாகிஸ்தானில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் கனமழை பெய்ததால் மக்கள் உறைவிடத்தை இழந்துள்ளன.
 
கனமழை காரணமாக 39 குழைந்தைகள் உட்பட 164 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 167 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
440 வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பெய்த மழைக்கு 1500 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.