திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 21 ஜனவரி 2023 (15:29 IST)

ஜம்மு-காஷ்மீரில் சாலை விபத்து- 5 பேர் பலி

Accident
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பில்லாவரில் உள்ள தனு பரோல் கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

ஜம்மு காஷ்மீர் மா நிலம் கத்துவா என்ற மாவட்டம் தனு பரோல் கிராமத்தில் பயணிகள் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜம்முவில் பனிமூட்டம் நிலவுவதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் காரணமாக விபத்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.